திருவேங்கடத்தில் மத்திய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவருக்கு பாராட்டு
மத்திய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவருக்கு பாராட்டு;

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் மத்திய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விவேகானந்தன் அவர்களுக்கு குருவிகுளம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பாக பாராட்டு விழா திருவேங்கடத்தில் சிவ சாம்பவா சேவா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு குருவிகுளம் வடக்கு ஒன்றிய தலைவர் வீரகுமார் மற்றும் தெற்கு ஒன்றிய தலைவர் குட்டி ராஜ் அவர்கள் தலைமை ஏற்றனர். இதில் முன்னாள் குருவிகுளம் வடக்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் மற்றும் குருவிகுளம் தெற்கு ஒன்றிய தலைவர் சங்கிலி பாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் குருவிகுளம் வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் சங்கரசுப்பு ஒன்றிய செயலாளர் ஓம் சக்தி, ராதாகிருஷ்ணன், கிளைத் தலைவர்கள் சுப்பாராஜ், கருப்பசாமி பொன்ராஜ் கோடீஸ்வரன், காளிராஜ்,மற்றும் செல்வகுமார் வீர தங்கம், குருவிகுளம் தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் அருண்குமார் துணைத் தலைவர் பால்சாமி பொருளாளர் நடராஜன் செயலாளர் மாரியப்பன் கிளைத் தலைவர்கள் நாராயணன் பொன்ராஜ், தெற்கு ஒன்றிய மகளிர் அணி தலைவி செல்வக்கனி மற்றும் சிவ சாம்பவா சேவா சங்கத்தின் தலைவர் சே.சிவகுரு ஜி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.