சங்கரன்கோவில் உலக நாடக தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது
உலக நாடக தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது;

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் திடலில் வைத்து உலக நாடக தின விழா நிகழ்ச்சி திருநெல்வேலி கலை பண்பாட்டு துறை இணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா தலைமை உரை ஆற்றி கலைஞர்களை பாராட்டி பேசினார். வட்டாட்சியர் பரமசிவன் அவர்கள் மற்றும் கலை பண்பாட்டு துறை அலுவலர்கள்,கிராமிய கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர்.