தேர்வில் வென்ற இளம் பணியாளர்களை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
மதுரையில் தேர்வில் வென்றவர்களை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.;
மதுரையில் செயல்படும் சமத்துவ இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக நடைபெற்ற TNPSC இலவச வகுப்பில் பயின்று தேர்வில் வென்று அரசுப்பணிக்குச் செல்லும் இளையோருக்கும், அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் ஊமச்சிகுளத்தில் இன்று (மார்ச் .30) பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று கடினமாக உழைத்து, தேர்வில் வென்றுள்ள இளம் அரசுப் பணியாளர்களை பணி சிறக்கவும், அவர்களின் பயிற்சியாளர்கள் இன்னும் பலருக்கு வழிகாட்டவும் பாராட்டி வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்.