குளித்தலை சுங்ககேட் பகுதியில் பொதுமக்களுக்கு மோர், இளநீர், சர்பத், வெள்ளரி, தண்ணீர் பாட்டில், ஜூஸ், தர்பூசணி வழங்கிய தவெக வினர்
தமிழக வெற்றிக் கழகம் குளித்தலை நகரம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா;
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் கோடைகாலத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் குளித்தலை நகரம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, வெயிலுக்கு இதமான மோர், இளநீர், சர்பத், வெள்ளரி, தண்ணீர் பாட்டில், ஜூஸ், தர்பூசணி உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். குளித்தலை நகர நிர்வாகிகள் விஜய், பிரபு, சிவா, லெஸ்லி, சாந்திப்பிரியா மற்றும் நகர கழக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் குளித்தலை ஒன்றிய நிர்வாகிகள் நிரேஷ்குமார், தியாகராஜன், தமிழழகன், லாகுல்பிரசாத், ராஜலட்சுமி தங்கதுரை, தோகைமலை ஒன்றிய நிர்வாகிகள் சந்தோஷ்குமார், வடிவேல், மகளிரணி நிர்வாகிகள் அம்பிகா, வினிதா, ரம்யா, காமாட்சி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.