காவலன் செயலி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

குமாரபாளையத்தில் காவலன் செயலி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்;

Update: 2025-03-30 12:16 GMT
காவலன் செயலி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
  • whatsapp icon
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவலன் செயலி  குறித்து போலீசார் விழிப்புணர்வு  ஏற்படுத்தினர். இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: காவலன் செயலி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். தனியாக செல்லும் பெண்களுக்கு, வீட்டில் தனியாக இருக்கும் பெரியவர்களுக்கு பாதுகாப்பானதாகும். வயதானவர்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், இந்த செயலியை பயன்படுத்தினால் ஆம்புலன்ஸ் கூட வரவழைக்க முடியும். இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன் பெறுங்கள். மற்றவர்களுக்கும் இதன்   நன்மையை எடுத்துரைத்து பதிவிறக்கம் செய்து கொள்ளச்  சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News