மகா பிரத்தியங்கிரா யாகம்

பங்குனி அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் 108 உயிர் மூலிகைகள் மற்றும் 108 மருந்துகள், பூக்கள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு நடைபெற்ற மகா பிரத்தியங்கிரா யாகத்தில் ஏராளமானோர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்;

Update: 2025-03-30 12:36 GMT
மகா பிரத்தியங்கிரா யாகம்
  • whatsapp icon
திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று மகா பிரத்தியங்கரா யாகம் நடைபெற்று வருகிறது. பங்குனி அமாவாசையை முன்னிட்டு இன்று மாலை கோவில் வளாகத்தில் 108 உயிர் மூலிகைகள், 108 மருந்துகள் ,பூக்கள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு மஹா பிரத்தியங்கரா யாகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த பிரத்தியங்கரா யாகம் முன்பு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பத்ரகாளி அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. யாகத்திர்க்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகி பாண்டி சிறப்பாக செய்திருந்தார்.

Similar News