ராசிபுரம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு விசேஷ பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..
ராசிபுரம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு விசேஷ பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..;

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னிதியில் திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று. தொடர்ந்து ஸ்ரீ நவ கிரகங்களுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு புஷ்ப வெள்ளி கவசம் அலங்காரம் செய்து பல்வேறு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையை கோவில் சிவாச்சாரியார்கள் உமாபதி ஸ்ரீ மது செய்திருந்தனர். ஸ்ரீ சரணாலய ஆஸ்ரமம் வெ. ராமகிருஷ்ணன் அவர்கள் சனிப்பெயர்ச்சியின் பலன்கள் கூறி பக்தர்களிடத்தில் சனிப்பெயர்ச்சியின் மந்திரங்கள் கூறி பூஜையை தொடங்கி வைத்தார். ராசிபுரம் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.