மலை வீதி ரவுண்டானாவில் சட்டவிரோத புகையிலை விற்பனை.இருவர் கைது.
மலை வீதி ரவுண்டானாவில் சட்டவிரோத புகையிலை விற்பனை.இருவர் கைது.;
மலை வீதி ரவுண்டானாவில் சட்டவிரோத புகையிலை விற்பனை.இருவர் கைது. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மலை வீதி ரவுண்டானா பகுதியில் சட்டவிரோத புகையிலை விற்பனை நடப்பது குறித்து பெண் காவல் உதவி ஆய்வாளர் சுபாஷினிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மார்ச் 29ஆம் தேதி காலை 10 மணியளவில் மலைவீதி ரவுண்டானாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் செயல்படும் ராசப்பா டீக்கடையில் சட்டவிரோத புகையிலை விற்பனை நடப்பது தெரியவந்தது. இந்த விற்பனையில் ஈடுபட்ட புகலூர் தாலுக்கா,கந்தசாமி தெருவை சேர்ந்த அசோக், செட்டியார் தெருவை சேர்ந்த போஸ் ஆகிய இருவரையும் கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 5,180 மதிப்புள்ள 185-ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.