இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

சித்தயன்கோட்டையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி;

Update: 2025-03-30 12:46 GMT
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
  • whatsapp icon
சித்தையன்கோட்டை பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது இஸ்லாமிய சமுதாய மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி சித்தயன்கோட்டை வளர்ச்சிக்கும், இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தயன்கோட்டை பெரிய பள்ளிவாசலில் சமத்துவ இப்தார் விருந்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரிய பள்ளிவாசல் மூத்த வள்ளிகள் எஸ்.உதுமான்அலி, எம்.சேக்தாவூது ஆகியோர் தலைமை தாங்கினார்கள் சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் செல்ல மரக்காயர் வரவேற்று பேசினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாறைப்பட்டி ராமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் ரசூல் மைதீன், எச்.ஹபீப் முகமது, ஆலீம், சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ரபீக் மைதீன், இளைஞர் அணி அமைப்பாளர் ரபீக், பேரூராட்சிமன்ற துணைத்தலைவர் ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

Similar News