பைப் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து
தருமத்துப்பட்டி அருகே பைப் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து;

திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி, கோம்பை அருகே பைப் ஏற்றி வந்த வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையின் அருகே தோட்டத்து பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.