வாகன விபத்தில் காவலர் பலி

மதுரை காவலர் சாலை விபத்தில் பலியான சம்பவம் நடந்துள்ளது;

Update: 2025-03-30 12:58 GMT
வாகன விபத்தில் காவலர் பலி
  • whatsapp icon
மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஆசிக் அகமது என்பவர் பரமக்குடி அருகே இன்று (மார்ச்.30) மதியம் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் இதற்கு முன்பு தல்லாகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த சாலை விபத்து குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ரம்ஜான் கொண்டாட சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது எனத் தெரிகிறது. கடந்த சில தினங்களாக காவலர்களின் அகால மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது காவலர்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

Similar News