ராசிபுரம் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,சரோஜா பங்கேற்பு...
ராசிபுரம் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,சரோஜா பங்கேற்பு...;

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டணம், சிங்களாந்தபுரம், கூனவேலம்பட்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டமானது ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,சரோஜா மற்றும் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் முன்னாள் MLA பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி ஆலோசனைகள் வழங்கி அடையாள அட்டைகளை சரி பார்த்து நிர்வாகிகளிடம் வழங்கினார். மேலும் வருகின்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை எடுத்ததுறைக்க வேண்டும் தற்போது காலகட்டத்தில் குழந்தைகளை பள்ளிக்கு கூட அனுப்புவதற்கு பயமாக உள்ளது.ஆசிரியர்கள் கூட பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் கஞ்சா,கள்ள சாராய விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது கட்டுப்படுத்தாத அரசாக திமுக அரசு உள்ளது என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் வேம்பு சேகரன்,பட்டணம் பேரூர் கழகச் செயலாளர் பாலசுப்ரமணியம் , மற்றும்,கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..