செட்டிக்குளம் பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு
பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டு கஞ்சி குடித்து ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.;
செட்டிக்குளம் பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் -சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் - தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் தலைமையில் செட்டிக்குளம் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டு கஞ்சி குடித்து ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கோபாலபுரம் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கலா தங்கராசு, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் கண்ணபிரான், மாவட்ட பிரதிநிதிகள் சந்திரமோகன், எஸ்.அழகுவேல், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, கிளை கழகச் செயலாளர் வெ.சந்திரசேகர் உள்ளிட்ட கழக பிரமுகர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.