குடும்ப அட்டையை தகுதியின்மை காரணமாக நிராகரித்த தனி வருவாய் ஆய்வாளரை பெண் ஒருவர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குடும்ப அட்டையை தகுதியின்மை காரணமாக நிராகரித்த தனி வருவாய் ஆய்வாளரை பெண் ஒருவர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதிதாக விண்ணப்பித்த குடும்ப அட்டையை தகுதியின்மை காரணமாக நிராகரித்த தனி வருவாய் ஆய்வாளரை பெண் ஒருவர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கழுத்தை இரண்டாக வெட்டி விடுவேன்...கவர்மெண்ட் காசில் இருந்துகொண்டு எங்களுக்கு ரேஷன் அட்டை தர மாட்டியா எனவும் மிரட்டல்..... விருதுநகர் மாவட்டம் சிவகாசி கருப்பணன் தெருவில் வசிப்பவர் சந்திரலேகா. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் மேற்கு வங்க மாநிலத்தில் பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது 2 பெண் குழந்தைகள் சிவகாசியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் கருப்பணன் தெருவிலுள்ள ஒரு முகவரியில் தனக்கான குடும்ப அட்டைக்கு இணைய வழியில் சந்திரலேகா விண்ணப்பம் மனு செய்துள்ளார். மனுவின் மீது சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தனி வருவாய் ஆய்வாளர் கோட்டையராஜ் நேரில் சென்று விசாரணை நடத்திய போது, சந்திரலேகா தனக்கான குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்திருந்த மனுவின் முகவரியில் காளிராஜ்- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கான குடும்ப அட்டை அந்த முகவரியில் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே ஒரே முகவரியில் 2 குடும்பத்தாருக்கு, அதுவும் விண்ணப்பதாரர் சந்திரலேகா வசிக்காத முகவரிக்கு குடும்ப அட்டை வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சந்திரலேகா தனி வருவாய் ஆய்வாளர் கோட்டையராஜின் செல்போனில் தொடர்பு கொண்டு அவரிடம் தகாத வார்த்தைகளுடன்- ஆபாசமாக பேசியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பெண் ஒருவர் தனி வருவாய் ஆய்வாளருடன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியதுடன், வருவாய்த் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சிவகாசி வட்ட வழங்க அலுவலர் கோதண்டராமன், தனி வருவாய் ஆய்வாளரிடம் தகாத வார்த்தைகளுடன்- ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த சந்திரலேகா மீது காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் கோட்டையராஜ் சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் கோதண்ட ராமனிடம் மனு அளித்துள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.