விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற ஆடவர் கபடி போட்டியில் மீனாட்சிபுரம் அணியினர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற ஆடவர் கபடி போட்டியில் மீனாட்சிபுரம் அணியினர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.*;
சித்திரை திருநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற ஆடவர் கபடி போட்டியில் மீனாட்சிபுரம் அணியினர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடவர் கபடி போட்டி நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் வட்டாரத்தில் உள்ள 20 அணிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகள் முழுவதும் வயது பிரிவுகள் இன்றி நக் அவுட் முறையில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பள்ளி மாணவர்கள் உட்பட பல்வேறு தனியார் கபடி குழுவினரும் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதியில் மீனாட்சிபுரம் செவன் லைன்ஸ் அணியினரும், கிருஷ்ணாபுரம் சிவந்தி ஸ்போர்ட்ஸ் அணியினரும் மோதினர். மீனாட்சிபுரம் அணியினர் கிருஷ்ணாபுரம் அணியினரை மூன்றுக்கு இரண்டு என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற முதல் அணியினருக்கு ரூ. 10 ஆயிரம், இரண்டாவது அணியினருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான போட்டிகள் அடுத்த வாரம் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.