இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் அமைச்சர்
மதுரை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டார்.;
மதுரை மதுரை மத்தியத் தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையம் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலில் ஜமாத்தாரர்கள் மற்றும் எல்லீஸ் நகர்ப் பகுதி திமுகவினர் இணைந்து நடத்திய இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று (மார்ச்.30)கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் செந்தில், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.