இயற்கை வேளாண் சந்தையாக திருவள்ளூர் உழவர் சந்தை மாற்ற கலெக்டர் உறுதி
உழவர்களுக்கான இயற்கை வேளாண் சந்தையாக திருவள்ளூர் உழவர் சந்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் உறுதி;
உழவர்களுக்கான இயற்கை வேளாண் சந்தையாக திருவள்ளூர் உழவர் சந்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் உறுதி. திருவள்ளூரில் இன்று இயற்கை வேளாண் சந்தையை மாவட்ட ஆட்சியர் பிரதாப் திறந்து வைத்தார் பாரம்பரிய விவசாயிகளை ஊக்குவிக்கவும் விலை பொருட்களை விற்பதற்கும் திருவள்ளூர் உழவர் சந்தையில் முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி இன்று திருவள்ளூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் சந்தை துவங்கி உள்ளது உழவர் சந்தையில் 35 லட்சம் ரூபாய் செலவு செய்து பராமரிப்பு பணிகள் செய்த போதிலும் விவசாயிகள் அதனை முழுமையாக பயன்படுத்தாததால் உழவர் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக இயற்கை வேளாண் சந்தை இன்று துவங்கப்பட்டுள்ளது மாதம் ஒருமுறை இங்கு காய்கறி பழம் மரச்செக்கு எண்ணெய் பாரம்பரிய அரிசி தேன் பனைவெல்லம் உள்ளிட்டவைகள் குறைந்த விலையில் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலைத் துறை மூலம் ஏற்பாடு செய்துள்ளது ஒரு மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயற்கை வேளாண் சந்தை செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார் இயற்கை விவசாயம் மூலம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய சந்தை துவங்கப்பட்டது மக்கள் இயற்கையாக பயிரிடப்படும் பொருட்களை பயன்படுத்த மாற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலும் உணவு பழக்கங்கள் ஏற்பட்டும் நோய்கள் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளதால் அதை மாற்றி சத்துள்ள உணவுகளாகவும் எவ்வித நச்சுப் பொருட்கள் இல்லாத உணவை கொள்வதற்கு தமிழக அரசு ஏற்படுத்தி வரும் ஒரு முன்னோடி திட்டமாக இது செயல்பட வேண்டும் வரும் காலங்களில் மாதம் ஒரு முறை என்பதற்கு மாற்றாக வாரந்தோறும் இயற்கை தந்தை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள் வரவேற்பை பொறுத்து ஏற்பாடுகள் செய்யப்படும் என ஆட்சியர் பிரதாப் தெரிவித்தார்.