பீர் பாட்டிலால் தம்பியின் மண்டையை உடைத்த அண்ணன் கைது!
மது போதையில் தம்பியின் மண்டையை பீர் பாட்டிலால் உடைத்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.;
வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் (21), அஜித்(19) ஆகிய இருவரும் சகோதரர்கள். மது போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறில் அஜித் பீர் பாட்டிலால் தம்பி விஜயின் தலையில் அடித்துள்ளார்.இதில் படுகாயமடைந்த விஜயை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.