ரம்ஜான் பண்டிகையை கொண்டாட பொருட்கள் விநியோகம்!
வேலூர் மாநகராட்சி 50-வது வார்டில் உள்ள 50 இஸ்லாமிய குடும்பத்தினருக்கு ரம்ஜான் பண்டிகையை கொண்டாட பிரியாணி அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.;
வேலூர் மாநகராட்சி 50-வது வார்டில் உள்ள 50 இஸ்லாமிய குடும்பத்தினருக்கு ரம்ஜான் பண்டிகையை கொண்டாட பிரியாணி அரிசி உள்ளிட்ட பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 10-வது ஆண்டாக முஸ்லிம்களுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கவுன்சிலர் அருணா விஜயகுமார் தலைமை தாங்கி 50 முஸ்லிம் குடும்பத்தினருக்கு பொருட்களை வழங்கினார்.