தொலைந்த செல்போனை மீட்டுக்கொடுத்த பெரம்பலூர் போலீசார்

காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த இளைஞர்;

Update: 2025-03-30 16:49 GMT
தொலைந்த செல்போனை மீட்டுக்கொடுத்த பெரம்பலூர் போலீசார் பெரம்பலூர் நகராட்சி, 15- வது வார்டு, சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர், விஜயகணபதி (21) .இவர் கடந்த மார்ச்-23 ஆம் தேதி தன்னுடைய செல்போனை தவறவிட்டார். இதுகுறித்து பெரம்பலூர் நகர காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் காணாமல் போன செல்போனை டிராக் செய்ததில் உளுந்தூர் பேட்டையில் இருப்பதை கண்டறிந்து காவல்துறையினர் இன்று (மார்ச்-30) உரியவரிடம் நகர காவல் நிலைய போலீசார் ஒப்படைத்தனர். காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த இளைஞர்

Similar News