விழுப்புரம் அருகே கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது;

வடவாம்பலம் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களைப் பெற்று பேசுகையில், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சேர்மன் வாசன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஊராட்சி தலைவர் லிங்கேஸ்வரி ஜவகர், ஒன்றிய கவுன்சிலர் ராஜ்குமார், கிளைச் செயலாளர் லட்சகன், முன்னாள் ஊராட்சி தலைவர் சச்சிதானந்தம், துணைத்தலைவர் வடிவேல், பி.டி.ஓ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.