பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்.

மதுரை சோழவந்தான் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது;

Update: 2025-03-31 01:05 GMT
  • whatsapp icon
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று (மார்ச்.30) காலையில் கோவிலிருந்து திருவிழா கொடி மற்றும் பொருட்களை எடுத்து சோழவந்தானின் நான்கு விதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் வந்தடைந்தது. தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் உபயதாரர் கன்னியப்பன் முதலியார் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். எஸ். ராஜாங்கம்,கோவில் செயல் அலுவலர் பொறுப்பு இளமதி, ஆய்வாளர் ஜெயலட்சுமி, மற்றும் அறங்காவலர்கள் பெரியசாமி, எஸ் எம் பாண்டியன், ஆண்டியப்பன், மங்கையர்கரசி உட்படபக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News