இருசக்கர வாகன விபத்து வாலிபர் உயிரிழப்பு

காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்து வாலிபர் உயிரிழப்பு காரிமங்கலம் காவலர்கள் விசாரணை;

Update: 2025-03-31 02:17 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம், அதகப்பாடி செந்தில் நகரை சேர்ந்தவர் கிரண், அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவருடன், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு, மீண்டும் நேற்று மாலை ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வண்டியை கிரண் ஓட்டி வந்துள்ளார். அப்போது காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்போது பின்னால் வந்த மற்றொரு வாகனம், கீழே விழுந்த ராமன் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கிரண் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து காரிமங்கலம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News