தாமரை மலரை பறிக்க சென்றவர் பலி

மதுரை மேலூர் அருகே கண்மாயில் தாமரை மலர்களை பறிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார்.;

Update: 2025-03-31 02:36 GMT
தாமரை மலரை பறிக்க சென்றவர் பலி
  • whatsapp icon
மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள மாத்தூர் குரும் பூரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் லோகநாதன் (35) என்பவர் தெற்குத் தெரு அருகேயுள்ள வலையங்குளம் கண்மாயில் நேற்று முன்தினம் (மார்ச்.29) தாமரை மலர் பறிப்பதற்காக கண்மாய்க்குள் இறங்கியுள்ளார். அப்போது தாமரை வேர்களில் சிக்கியவர் நீரில் மூழ்கி உயி ரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News