தாராபுரம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம் அருகே ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டினர்;

100-நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை விடுவிக்காத மத்திய அரசை கண்டித்து திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் சின்னபுத்தூர் ஊராட்சி சத்திரம் பகுதியில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்தும், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணைச்செயலாளர் பிரபாவதி பெரியசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, மாவட்ட பிரதிநிதி வி.நந்தகுமார், சின்னக்கம்பாளையம் பேரூர் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், கோனபஞ்சாலை செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ரோகிணி ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்