அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

அலங்காரம்;

Update: 2025-03-31 03:07 GMT
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
  • whatsapp icon
சின்னசேலத்தில், கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.கோவிலில் தெலுங்கு வருட பிறப்பு, சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு, 17 வகை பொருட்களால், சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையை பரத் சர்மா செய்தார். இதில் ஆர்ய வைசிய நிர்வாக தலைவர் ரவீந்திரன் மற்றும் வாசவி, வனிதா கிளப் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News