புதிய ரேஷன் கடை திறப்பு

திறப்பு;

Update: 2025-03-31 03:13 GMT
புதிய ரேஷன் கடை திறப்பு
  • whatsapp icon
கல்வராயன் மலை, தொரடிப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கவியம் கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில், புதிதாக பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டது. இந்த கடையை,உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சந்திரன், பி.டி.ஓ., ஜோசப்ஆனந்தராஜ், துணை சேர்மன் பாட்ஷாபி ஜாகிர்உசேன், ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, கிருஷ்ணன், உதவி பொறியாளர் அருண்ராஜா, ஊராட்சி தலைவர்கள் செல்வராஜ், ரத்தினம், ஆண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். . தொடர்ந்து மட்டப்பட்டு வண்டகப்பாடி இடையே ரூ 2.3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. மேலும் கொட்டபுத்தூர் - மோட்டுவளவு வரை, ரூ. 7 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் துவங்கின.

Similar News