மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்
மதுரை அருகே மின் வாரிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.;

மதுரை மாவட்டம் சமயநல்லுார் மின்வாரியத்தில் சோழவந்தான் பிரிவு உதவிப் பொறியாளராகன ராஜேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் அடிக்கடி ஒழுங்கீனமாக நடப்பது, உயரதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுப்பது, அலுவலக பணத்தில் முறைகேடு செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை சஸ்பெண்ட் செய்து செயற்பொறியாளர் ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.இது மின் வாரிய பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.