கோவை: மர்மமான முறையில் முதியவர் உயிரிழப்பு-காவல்துறை விசாரணை !

தமிழக - கேரள மாநில எல்லையான வாளையாறு வனப்பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-03-31 03:51 GMT
கோவை: மர்மமான முறையில் முதியவர் உயிரிழப்பு-காவல்துறை விசாரணை !
  • whatsapp icon
தமிழக - கேரள மாநில எல்லையான வாளையாறு வனப்பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாளையாறு சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்திய அவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.உயிரிழந்த முதியவர் யார், எங்கிருந்து வந்தார், வனப்பகுதியில் ஏன் அமர்ந்து மது அருந்தினார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முதியவரின் உடலை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News