கோவை: முதல்வரை தீர்மானிப்பது மக்கள் தான் - துரை வைகோ பேட்டி !
யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பது மக்கள் தான் எனவும் கருத்துக்கணிப்பு சொல்வதை வைத்து அதனை தீர்மானிக்க முடியாது என துரை வைக்கோ கூறியுள்ளார்.;

கோவை விமான நிலையத்தில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பது மக்கள் தான் எனவும் கருத்துக்கணிப்பு சொல்வதை வைத்து அதனை தீர்மானிக்க முடியாது என தெரிவித்தார். 2026 ஆம் தேர்தல் தவெக- திமுகவிற்கும் தான் என்ற விஜய் பேசியது குறித்தான கேள்விக்கு , விஜய் அவரது கருத்தை தெரிவித்திருப்பதாகவும் மக்கள் ஆதரவு யாரிடம் இருக்கிறது என்பதை தீர்மானிப்பது தேர்தல் களம் தான் என தெரிவித்தார். விஜய் ஒரு முன்னணி நட்சத்திரம் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்த அவர் அரசியல் வேறு சினிமா வேறு என கூறினார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பலரும் ஜெயித்துள்ளார்கள் பலபேர் தோற்றுள்ளார்கள் அதனை தேர்தல் களம் தான் முடிவு செய்யும் என தெரிவித்தார். சினிமா நட்சத்திரம் என்பதால் அதிகம் கூட்டம் கூடும் ஆனால், அதனை வைத்து நாம் முடிவை கூற முடியாது என தெரிவித்தார்.