ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் மரம் நடும் விழா : மேயர் ஜெகன் பங்கேற்பு
தூத்துக்குடியில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற மரம் நடும் விழாவை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.;

தூத்துக்குடியில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற மரம் நடும் விழாவை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். தூத்துக்குடி ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் 359வது வாரமாக மரம் நடும் நிகழ்ச்சி தருவை மைதானத்தின் கிழக்கு பகுதியில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் தலைவர் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார். இதில் தொழில் அதிபர் உப்பு உற்பத்தியாளர் கேஎஸ்ஜி கண்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் அதிஷ்ட ராஜ், வழக்கறிஞர் செல்வராஜ், மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் உறுப்பினர்கள் கேசவன், ஆனந்த கணேஷ வேல்முருகன், பாலா, மார்ட்டின், ரகுபதி, மாரி, செந்தில், இம்மானுவேல், ஆசீர், நாராயணன் ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.