உறையூரில் கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருட்டு முயற்சி?

உறையூரில் கமலவல்லி நாச்சியார் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை;

Update: 2025-03-31 05:29 GMT
உறையூரில் கமலவல்லி நாச்சியார் கோவிலில் திருட்டு முயற்சி?
  • whatsapp icon
திருச்சி உறையூரில் கமலவல்லி நாச்சியார் கோவில் உள்ளது. ஸ்ரீரங் கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாக விளங்கும் இந்த கோவி லுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கி றார்கள். இந்தநிலையில் நேற்று இரவு கோவிலில் சுவரின் அருகே கயிறு கட்டி மர்ம நபர் உள்ளே இறங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் ரோந்து போலீசார் உள் பட 10-க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலுக்குள் சென்று பார்வையிட்ட னர். மேலும் கோவிலில் ஏதேனும் திருட்டு சம்பவம் அரங்கேறியதா? எனவும் விசாரணை நடத்தினார்கள். பின்னர் எதுவும் திருட்டு போக வில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News