ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில்

101-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நான்கினிய விழாக்கள்;

Update: 2025-03-31 05:39 GMT
  • whatsapp icon
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில், 101-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நான்கினிய விழாக்கள் நடைபெற்றது. உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு, கதை சொல்லும் பயிற்சி நடைபெற்றது. கதை சொல்வதில் உள்ள நன்மைகள், கதை கேட்பதில் உள்ள பயன்கள், கதை சொல்லும் நுட்பம் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர் பால சண்முகம் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, எஸ்ஒஎஸ் தொண்டு நிறுவனம் செய்திருந்தது. கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சிறார் படக்கதை நூல் வழங்கப்பட்டன. தமிழ்நாடு கடல் சார்ந்த பணியாளர் சங்கத்தின் 2-ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவா தலைமை வகித்தார். அசோசியேசன் ஆப் அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் நாகை மாவட்ட ஆளுநர் எஸ்.இ.ஞானசேகரன், கடல் சார் பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் மனோகரன் ஆகியோர், பள்ளிக்கு மரக்கன்றுகளை வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர். சிபிசிஎல் மேலாளர் ஓய்வு ரமேஷ், மரக்கன்றுகளை பராமரிக்க இரும்பு கூண்டுகளை வழங்கினார். தேசிய பசுமைப்படை நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், மரம் நடும் பணியில் ஈடுபட்ட தேசிய பசுமை படை மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கினார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு நாடகம் மற்றும் உரையாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குடிநீரை சேமித்தல், நெகிழி பயன்பாட்டை குறைத்தல், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல் ஆகிய கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. பள்ளியின் 101 -வது ஆண்டு விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவா தலைமை வகித்தார். பள்ளியின் செயலர் சுப.சம்பந்தம் முன்னிலை வகித்தார். இந்திய கட்டுமான சங்கத்தின் தலைவர் தங்கதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில், பொறியாளர்கள் நவாப் ஜான், டெல்டா பன்னீர், ஓம் சக்தி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை அமுதா ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Similar News