மணப்பாறை அருகே குடியிருப்பு அருகே வாலிபர் பிணம்

இறந்து கிடந்தவரின் முகம் அழுகிய நிலையில் இருந்தால் போலீசார் விசாரணை;

Update: 2025-03-31 05:44 GMT
மணப்பாறை அருகே குடியிருப்பு அருகே வாலிபர் பிணம்
  • whatsapp icon
மணப்பாறை ரெயில்வே குடியிருப்பு அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக மணப்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பே ரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தவரின் முகம் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மதுரை மாவட்டம், எம்.கே.புரத்தை சேர்ந்த முகேஷ்வரன்(வயது 28) என்பதும், மணப்பாறையில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த ஆறு மாதமாக எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News