கார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் வாலிபர் பலி
புளியஞ்சோலை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சபெருமாள்பட்டி ஊராட்சி வைரப் பெரு மாள்பட்டி பகுதியில், கொல்லிமலை ஈராங்குழி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (வயது 22) என்பவர் பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். நேற்று மாலை வைரப்பெருமாள்பட்டி பகுதியில் இருந்து புளியஞ்சோலைக்கு மோட்டார் சைக்கிளில் அவர் சென்றார். அப்போது எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தலை மற்றும் முகம் பகுதிகளில் பலத்த காயம் அடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் அந்த கார் சாலை ஓரத்தில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் அந்த காரில் வந்த அழகர்சாமி(31), அவரது உறவினர் கலைச் செல்வி (42) ஆகியோர் காயமடைந்து, சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் மற்றும் போலீ சார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த சுபா ஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில், காரை ஓட்டி வந்த அழகர்சாமி திருச்சி வயலூர் ரெட்டைவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் தனது உறவினர்களுடன் புளியஞ்சோலைக்கு சென்று விட்டு, நேற்று மாலை திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரி யவந்தது. இந்த விபத்தால் புளியஞ்சோலை பச்சபெருமாள் பட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.