முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

தருமபுரி அதிமுக அலுவலகத்தில் நகரத்திற்குட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்பு;

Update: 2025-03-31 07:17 GMT
  • whatsapp icon
தர்மபுரி நகரத்துக்குட்பட்ட பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரி அதிமுக அலுவலகத்தில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக கொள்கை பரப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை சந்தித்த பின்னர் பேசிய அவர் வருகின்ற 2026 இல் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக பாடுபட வேண்டும். எந்த கட்சியிலும் இல்லாத்வகையில் அதிமுகவில் இளைஞர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர்.மேலும் பூத்களில் அனைவருக்கும் பொருப்புகளை வழங்கியது எடப்பாடியால் தான் எனவும் இனி வரும் காலத்தில் பூத் கமிட்டி புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றி வேண்டுமென்று பேசினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில விவசாயப்பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, நகர கழக செயலாளர் பூக்கடை ரவி தகவல் தொழில்நுட்பம் ஒன்றில் இணைச் செயலாளர் பிரசாத் மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல்,உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News