சிறுமி உயிரிழந்த சம்பவம் : அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல்!
எட்டையாபுரம் அருகே தீவைக்கப்பட்ட சிறுமி இறந்த நிலையில், அவரது குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல் கூறினார்.;
எட்டையாபுரம் அருகே தீவைக்கப்பட்ட சிறுமி இறந்த நிலையில், அவரது குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல் கூறினார். தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டம், கீழநம்பிபுரம் கிராமத்தில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், மார்கண்டேயன் முன்னிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய நிதி உதவி வழங்கினார். தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்முர்த்தி, மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், விவசாய தொழிலாளர் அணி பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி சோலைசாமி, ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் கணேச பாண்டியன், கிளைச் செயலாளர்கள் பாண்டி, முனியசாமி, கிருஷ்ணசாமி ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் வேலுச்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.