வானூர் அருகே அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்;

வானுார் ஒன்றியத்தில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த விழாவிற்கு, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி வரவேற்றார்.ஊராட்சி சேர்மன் உஷா முரளி, கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமையில், 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில், வானுார் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயப்பிரகாஷ், டாக்டர் சுப்புலட்சுமி, சமுதாய செவிலியர் கங்காதேவி, மேற்பார்வையாளர் தேன்மொழி, ஜெயலட்சுமி, அமராவதி, மஞ்சுளா, காந்திமதி, ராஜேஸ்வரி, மகேஸ்வரி.மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பலர் பங்கேற்றனர்.விழாவில ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.