கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட கொடி மரம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் கோவிலில் கொடி மரம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.;

Update: 2025-03-31 12:17 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மூன்று மாதக் கொடி கம்பம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் மூன்று மாத கொடியேற்றம் இன்று (மார்ச்.31) இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் அதற்கான மூன்று மாத கொடி கம்பம் சோழவந்தான் அக்க சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து விஸ்வகர்மா ஆச்சாரியார்கள் உறவின் முறை சார்பாக மஞ்சள் சாத்தி ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. கோவில் பணியாளர்கள் பக்தர்கள் பொதுமக்கள் உடன் வந்தனர்

Similar News