புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை
மதுரை தெற்கு வாசல் புதிய சாலை அமைக்க பூமி பூஜையில் எம்எல்ஏ கலந்து கொண்டார்.;
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 53 வது வார்டில் தெற்கு வாசல் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (மார்ச்.31)நடைபெற்றது பூமி பூஜைக்கு தெற்கு தொகுதி எம்எல்ஏ புதூர் பூமிநாதன் துவக்கி வைத்தார் உடன் தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, கவுன்சிலர் அருண்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.