தென்காசி பகுதியில் கனரக லாரிகளால் தொடரும் போக்குவரத்து நெரிசல்

கனரக லாரிகளால் தொடரும் போக்குவரத்து நெரிசல்;

Update: 2025-03-31 14:07 GMT
தென்காசி பகுதியில் கனரக லாரிகளால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் கேரளாவிற்கு கனிம வளங்கள் மிகப்பெரிய ராட்சத கனரக லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. லாரிகளால் கடையம் மெயின் பஜாரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் மிகப்பெரிய லாரிகள் ஒரே நேரத்தில் எதிரே வந்ததால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு லாரிகளை மாற்றுப்பாதையில் மாற்றிவிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News