சாத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது

சாத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது;

Update: 2025-03-31 17:35 GMT
சாத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது
  • whatsapp icon
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 23ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. மேலும் எட்டு நாட்கள் நடைபெறும் இந்த பொங்கல் திருவிழாவில் நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மேலும் பங்குனி பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா இன்று நடை பெற்றது. இந்த பூக்குழி திருவிழா வை முன்னிட்டு சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3000க்கு மேற்பட்ட பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து வழி பட்டனர் மேலும் பூக்குழி திருவிழாவில் சுமார் 500க்கு மேற்பட்ட பக்தர்கள் காளியம்மன் கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியில் ஏராளமான பக்தர்கள் குழந்தை களுடன் பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார். மேலும் பூக்குழி இறங்கும் பக்தர்கள் அலகு குத்தியும் ஸ்ரீஅம்மன் மற்றும் காளி உள்பட ஏராளமான அம்மன் வேடமிட்டும் பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் பூக்குழியில் இறங்கி தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினார்கள். மேலும் இந்த பூக்குழி திருவிழாவை முன்னிட்டு சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 10000க்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஸ்ரீ காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சுமார் 200க்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Similar News