ராஜபாளையம் அருகே கம்மாபட்டியில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்லாயிரக் கணக்கான ரூபாய் மதிப்பிலான பஞ்சு பொதிகள் மற்றும் இயந்திர பாகங்கள்

ராஜபாளையம் அருகே கம்மாபட்டியில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்லாயிரக் கணக்கான ரூபாய் மதிப்பிலான பஞ்சு பொதிகள் மற்றும் இயந்திர பாகங்கள் எரிந்து சேதமானது;

Update: 2025-03-31 17:37 GMT
ராஜபாளையம் அருகே கம்மாபட்டியில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்லாயிரக் கணக்கான ரூபாய் மதிப்பிலான பஞ்சு பொதிகள் மற்றும் இயந்திர பாகங்கள்
  • whatsapp icon
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கம்மாபட்டியில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்லாயிரக் கணக்கான ரூபாய் மதிப்பிலான பஞ்சு பொதிகள் மற்றும் இயந்திர பாகங்கள் எரிந்து சேதமானது. இன்று விடுமுறை என்பதால் நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் காயம் இன்றி தப்பினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கம்மாப்பட்டியில் சங்கர் மற்றும் நந்தா உள்ளிட்டோர் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகின்றனர். இன்று மாலை கழிவு பஞ்சு மொத்தமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீ பற்றியது. ஒரு பகுதியில் பற்றிய தீ அறை முழுவதும் வேகமாக பரவியது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு வாகனம் மற்றும் தனியார் தண்ணீர் வாகனம் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் பல்லாயிரக் கணக்கான ரூபாய் மதிப்பிலான பஞ்சு பொதிகள் மற்றும் இயந்திர பாகங்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்று விடுமுறை என்பதால் நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News