ஆலங்குளத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது: போலீசார் வழக்கு பதிவு;

Update: 2025-04-01 01:41 GMT
ஆலங்குளத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பரும்பு பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியே பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் நல்லூா் தங்கமுத்து மகன் சுரேஷ் (21) மற்றும் காளத்திமடம் சொரிமுத்து மகன் சுப்பிரமணியன் (என்ற) சுப்ரி (35) என்பதும் அவா்கள் விற்பனைக்காக 250 கிராம் கஞ்சா கொண்டு சென்றதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா் கஞ்சாவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

Similar News