திருவேங்கடத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : போலீசார் விசாரணை;

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கீழதிருவேங்கடம் முதல் கோவில்பட்டி செல்லும் சாலையில் சங்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி அருணாச்சலம் என்பவர் இருசக்கர வாகனத்தில் முன்னே சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென வண்டியை நிறுத்தியதாக கூறப்படும் நிலையில் பின்னே கழுகுமலையை பகுதியை சேர்ந்த போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமானது அருணாச்சலம் இருசக்கர வாகனத்தில் பலமாக மோதிய விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசனை அங்குள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருவேங்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தை குறித்து பதை பதைக்க சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.