
வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் தாசவநாயக்கன்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு டாஸ்மாக் கடை பூட்டப்பட்டுள்ள நேரத்தில் கடை அருகில் மதுவிற்றுக் கொண்டிருந்த தஞ்சை மாவட்டம் திருவோணம் காவலிப்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 45) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 11 மது பாட்டில்கள், ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.