கோடை காலத்தில் கறவை மாடுகளை பராமரிப்பது எப்படி?

பல்லடத்தில் கோடை காலத்தில் கறவை மாடுகளை பராமரிப்பது எப்படி?;

Update: 2025-04-01 04:27 GMT
  • whatsapp icon
கோடைகாலத்தில் கறவை மாடுகள் மற்றும் கால்நடைகள் பராமரிப்பு குறித்து கால்நடை மருத்துவர் கூறியதாவது:- கோடை காலத்தில் ஏற்படும் அதிக அளவு வெப்பத்தினால், கால்நடைகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக பசுந்தீவன பற்றாக்குறை, கடுமையான வெப்ப நிலை, பராமரிப்பு முறை போன்றவற்றால் கறவை மாடுகளில், பால் உற்பத்தி பாதிக்கப்படும். மேலும் கோடை காலத்தில் ஈக்களின் பெருக்கம் அதிகமடைவதால் ஈக்களை கட்டுப்படுத்துவதற்கு மருந்து தெளிக்கலாம். மேலும், மாட்டுத்தொழுவம் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை குடிநீர் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News