பாணாவரம்:லாரியில் மண் கடத்திய வாலிபர் கைது

லாரியில் மண் கடத்திய வாலிபர் கைது;

Update: 2025-04-01 05:19 GMT
பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராவல் மணல் திருடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பாக்கம் கிராமத்தில் தனி நபருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் கிராவல் மணலை அள்ளிக் கொண்டிருந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அதேப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) என்பதும், அனுமதி இன்றி கிராவல் மண் எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஒரு யூனிட் மண், பொக்லைன் எந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News