கோவை: மருதமலை கோவிலில் மாநகர ஆணையர் ஆய்வு!
கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.;

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7-வது படைவீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 4 - ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி யாக குண்டம் அமைத்தல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கோவை மாவட்ட காவல் ஆணையர் சரவண சுந்தர் மருதமலைக்கு நேற்று வந்தார். அவர் மலை அடிவாரத்தில் இருந்து கோவில் வரை சென்று கும்பாபிஷேக ஏற்பாடுகள், பக்தர்களுக்கான வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை அடுத்து அவர் பக்தர்களுக்கு குடிநீர், ஓய்வெடுக்கும் வசதி, படிக்கட்டுகள் வழியாக நடந்து பக்தர்கள் இளைப்பாற பந்தல்கள், வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து ஆய்வு செய்தார் அவருடன் அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.