
தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் புதிய சுற்றுச்சுவர் கட்டுதல் மற்றும் கோவில் புனரமைப்பு பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். கவுன்சிலர் சுதா மணிகண்டன் முன்னிலை வகித்தார்.ஊராட்சி தலைவர் தனலட்சுமி கோவிந்தன் வரவேற்றார். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு மிக்க சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் புதிதாக சுற்றுசுவர் கட்டவும், கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 91.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று பூமி பூஜை நடந்தது. கார்த்திகேய குருக்கள் பூஜைகளை செய்தார்.